Posts

என்னைக் கவர்ந்த ஒரு மனிதர் - தளபதி விஜய்

Image
                    என்னைக் கவர்ந்த ஒரு மனிதர் என்று யார் என்னிடம் கேட்டா லும் என்னுடைய பதில் என்றும் விஜய் என்ற மூவெழுத்தாகத்தான் இருக்கும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை. விஜய் என்ற பெயரைக் கூறினால் அவரைப் பற்றி சிறுப்பிள்ளைக்கூட புகழாரம் பாடும். தமிழ் சினிமாவையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் உயர்ந்த மனிதர் விஜய். இவர் தன் நடிப்பினால் மட்டுமல்லாமல் தனது கொடையுள்ளத்தினாலும் மக்களின் மனதைக் கவர்ந்தவர் . இவரின் இயற்பெயர் ஜொசப் விஜய் ஆகும்.  எஸ். ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் ஆகிய இருவரின் ஒரே புதல்வன் விஜய். இவருக்கு தன் பெற்றோர் சூட்டிய பெயர் விஜய் என்றாலும் 'தளபதி' என்று அனைத்து ரசிகர்களாலும் செல்லமாக அழைக்கப்படுகிறார். 1999 இல் விஜய் இந்து இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை மணந்தார்.  ஜேசன் சஞ்ஜே, மற்றும் திவ்யா சாஷா ஆகியோர் இவரின் பிள்ளைகள்.  பலர் மனத்தில் எழக்கூடிய கேள்வியை என்னால் உணர முடிகிறது. "என்ன இது ? என்னைக் கவர்ந்த மனிதரைப் பற்றி கேட்டால் அனைவரும் பேரறிஞர்கள் மற்றும் மஹான்களைப் பற்றித் தானே கூறுவார்கள் ! ஆனால், விஜயா ? ஒரு நட

உழைப்பாளர் தினம் - மே 1

உழைப்பாளிகள், நாட்டின் முதுகெலும்பும் இவர்களே, பூமிப்பந்து சுழல்வதற்கு காரணமும் இவர்களே, விவசாயி இல்லையெனில் பூமிதனில் விளைச்சல் இல்லை. மருத்துவர்கள் இல்லையெனில், நோய்களுக்குத் தீர்வு இல்லை. ஆசிரியர்கள் இல்லையெனில், தலைச்சிறந்த சமுதாயம் இல்லை. தன் கைரேகைத் தேய்ந்துப் போகும் அளவுக்கு, தினம் தினம் உழைக்கின்றனரே, அவர்களின் புகழை உழைப்பாளர் தினத்தன்று கூட, நாம் பாடவில்லையெனில், நாம் மனிதர்களே இல்லை. உழைக்கும் கரங்களுக்கு சமர்ப்பணம்

கொரோனா - பழிவாங்குகின்றதா இயற்கை ?

கொரோனா இயற்கை அன்னை அனுப்பி வைத்த அரக்கனே. இந்த உலகம் மனிதனுக்கு மட்டும் சொந்தமல்ல ! எல்லா ஜீவராசிகளுக்கும் இம்மண்ணில் சம உரிமை உண்டு என்பதை உணர மறந்தான் மனிதன். காடுகளை அழித்து வீடுகளைக் கட்டினான். காற்றை மாசுப்படுத்தி பறவைகளை வாழ முடியாமல் செய்தான். மிருகங்களைக் கொன்று தின்றான். வளர்ச்சி என்று சொல்லிக்கொண்டு இயற்கையையே பதம் பார்த்தான். நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும் என்பதுபோல் செய்த பாவத்தின் தண்டனையை இப்போது அனுபவிக்கிறான். மனிதர்களை வீட்டினுள் முடக்கிவிட்டு இயற்கை அன்னை ஓய்வு பெருகிறாள். மரம் , செடி கொடிகள் அனைத்தும் பசுமையாக வளர்ந்து நம்மைப் பார்த்து சிரிக்கின்றன. விலங்குகள் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றன.ஓசோன் மண்டலம் மீண்டும் உயிர் கொள்கின்றது. இந்த மாபெரும் இயற்கை பிரவஞ்சத்தில் தான் ஒரு தூசியளவு தான் என்று தெரியாமல் ஆடிய மனிதனுக்கு கண்ணுக்குத் தெரியாத ஒரே ஒரு கிருமியின்வழி நல்லதொரு பாடத்தைப் புகடிவிட்டாள் பூமித்தாய்.

கோவிட்19 - பேரழிவின் ஆரம்பம்

Image
                   ஒரு நாளைக்கு எத்தனையோ ஆயிரம் உயிர்கள் மடிகின்றன. இன்னும் எத்தனை உயிர்களைத்தான் இக்கொடிய நோய்க்கு பழியாக்க நாம்  காத்திருக்கிறோம்? மனிதா இக்கணமாவது உன் கண்களைச் சற்று திறந்து விழிப்புணர்வு கொள்! உன் அலட்சியத்தால் ஆரம்பித்தது தானே இந்த அழிவு.  கோவிட்-19 கடவுளின் திருவிளையாடல் அல்ல ! மாறாக மனிதனின் சுயநலமே ! யார் எப்படி போனால் எனக்கென்ன என்று இருப்பதுதான் மனிதரின் இயல்பு. அம்மானிட கூட்டத்தில் ஒருவனாவது "அனைவரும் ஒத்துழைத்தால் மட்டுமே இந்த நோயை அழிக்க முடியும்" என்று ஒரு வினாடி எண்ணியிருந்தால் கோவிட்-19 தொற்று பெருமளவில் பரவியிருக்க சாத்தியமில்லை. என்ன செய்வது, நடந்து முடிந்ததைப் பற்றி பேசினாலும் எந்தவொரு பலனுமில்லை. நான் அனைவரையும் கைகூப்பி கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். தயவுசெய்து தத்தம் நாட்டில் விதித்திருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆனை அல்லது ஊரடங்கு சட்டத்தைப் பின்பற்றுங்கள்.உங்கள் நேரத்தை குடும்பத்தினருடன் கழியுங்கள். பிள்ளைகளிடம் பேசி விளையாடி மகிழுங்கள். ஒரு நல்ல கதைப்புத்தகத்தைப் படியுங்கள். திரைப்படங்களை குடும்பத்தோடு கண்டு மகிழுங்